தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு வருகிறது கொரோனா மருந்து! கைக்கொடுக்குமா?

 

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு வருகிறது கொரோனா மருந்து! கைக்கொடுக்குமா?

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. மருந்து கண்டிபிடிப்பதற்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கிவிட்டது. மேலும் 15 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு வருகிறது கொரோனா மருந்து! கைக்கொடுக்குமா?

இந்நிலையில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக சிப்லா மற்றும் ஹெட்டெரோ நிறுவனங்கள் தயாரித்த மருந்தினை வழங்க இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து கோவிஃபோர் (Covifor)என்கிற பெயரில் இந்த மருந்து விற்பனைக்கு வருகிறது. 100 மில்லிகிராம் அளவுடைய இந்த மருந்தின் விலை ரூ .5,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹெட்டெரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த மருந்து ஹைதராபாத், டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மும்பை மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கப்படவுள்ளது.