ஒரு தடுப்பூசியின் விலை  பத்தாயிரம் ரூபாயாம்! சீன கம்பெனி தகவல்!

 

ஒரு தடுப்பூசியின் விலை  பத்தாயிரம் ரூபாயாம்! சீன கம்பெனி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 23 லட்சத்து  07 ஆயிரத்து 265 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 8 நாட்களுக்குள் 23 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 783 நபர்கள்.

இந்தியா கொரோனா நோய் பரவலில் உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால், புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக முதலிடத்தில் உள்ளது.

ஒரு தடுப்பூசியின் விலை  பத்தாயிரம் ரூபாயாம்! சீன கம்பெனி தகவல்!

கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதே தீர்வாக இருக்க முடியும்.

ரஷ்யா இறுதிகட்ட பரிசோதனையுடன் உலகின் முதல்கொரோனா தடுப்பூசி என்று பதிவும் செய்துவிட்டது.

இந்நிலையில், சினோபார்ம் எனும் சீன நிறுவனம் கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது.

ஒரு தடுப்பூசியின் விலை  பத்தாயிரம் ரூபாயாம்! சீன கம்பெனி தகவல்!

இந்நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் சினோபார்ம் கம்பெனியின் தடுப்பூசி விற்பனைக்கு வரும் என அந்த நிறுவனத் தலைவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் ஓர் ஆண்டுக்கு 22 கோடிகளுக்கு அதிகமான தடுப்பூசிகளை இந்நிறுவனத்தால் தயாரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்தத் தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வரும் என்பதே.

ஒரு தடுப்பூசியின் விலை  பத்தாயிரம் ரூபாயாம்! சீன கம்பெனி தகவல்!
 (AP Photo/Ted S. Warren)

விலை அதிகம் என்பதால் எளிய மக்களுக்கு இது கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. கொரோனா கொடூரம் ஒரு பக்கம் என்றால், தடுப்பூசியின் விலை இன்னொரு பக்கம் அச்சுறுத்தும் என்பதாக இருக்கிறது.