கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது!

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது!

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது!

அதன்படி காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பரிசோதிக்க தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது . முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது!

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தும் ஆராய்ச்சி துவங்கியது. சென்னை எஸ்ஆர் எம் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் 10 தன்னார்வலர்களில் ஆரோக்கியமான நிலையில் இருந்த 2 பேருக்கு 0.5 எம்எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.