செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்தைத் தொடலாம்! – எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் பரபரப்பு தகவல்

 

செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்தைத் தொடலாம்! – எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் பரபரப்பு தகவல்

இந்தியாவில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் கொரோனா உச்சத்தை தொடும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் மிகப்பெரிய உச்சத்தை எட்டி பிறகு படிப்படியாக குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா தொட்டு வருவதால் இதுதான் மருத்துவ உலகம் குறிப்பிட்ட உச்சமாக இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா உச்சம் என்பது செப்டம்பர் அல்லது அக்டோபரில் இருக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்தைத் தொடலாம்! – எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் பரபரப்பு தகவல்செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “கொரோனா தற்போது ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எப்போது உச்சம் தொடுகிறதோ அதன் பிறகு கீழே இறங்க ஆரம்பிக்கும். தற்போதுள்ள நிலையை வைத்துப் பார்க்கும்போது செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத நடுப் பகுதியில்தான் கொரோனா உச்சத்தை தொடும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவில் பரவல் இருக்கும் என்று கூற முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை அக்டோபர் 10 முதல் 15ம் தேதிக்குள் உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்தைத் தொடலாம்! – எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் பரபரப்பு தகவல்ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இறங்கு முகத்தில் உள்ளது. அங்கு மக்கள் தொகை மிகக் குறைவு என்பதால் விரைவாக உச்சத்தை தொட்டுவிட்டது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். இந்தியாவில் கொரோனா உச்சத்துக்கு செல்லும்போது 50 முதல் 60 சதவிகிதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
கொரோனா பாதிப்பைத் தவிர்க்க சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். நமக்கு வரவில்லை அதனால் இதை எல்லாம் செய்ய வேண்டியது இல்லை என்று கருத வேண்டாம். நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்ற முகக் கவசம் அவசியம்.

செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்தைத் தொடலாம்! – எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் பரபரப்பு தகவல்தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது உடனடியாக நடக்காது. பள்ளிகளில் மாணவர்கள் அருகில் அருகில் அமர்வார்கள். அனைத்து பள்ளிகளிலும் இடைவெளியை அளிக்க முடியாது. எனவே, பள்ளி, கல்லூரிகளைத் திறக்க நாட்கள் ஆகும். தமிழகத்தில் மற்ற பகுதிகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில், உலகில் நிலைமை எப்படி இருக்கிறது என்று கண்காணிக்க வேண்டும். அதன் பிறகு பரவல் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று உறுதியான பிறகே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.

செப்டம்பர், அக்டோபரில் கொரோனா உச்சத்தைத் தொடலாம்! – எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் பரபரப்பு தகவல்கொரோனா தாக்கம் தற்போதைக்கு வெளியேற வாய்ப்பில்லை. ஒரு சில ஆண்டுகள் இந்த வைரஸ் தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு டிசம்பர், அடுத்த ஆண்டு ஜனவரியில் உலகம் முழுக்க கொரோனா தாக்கம் குறைந்துவிடும். அதன்பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக தொற்று ஏற்படலாம். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடலாம். அதுவரை நோய்த் தாக்கம் அதிகரிக்குமா, வைரஸ் தன்மை மாறுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.