அசுரன் படம் ஆரம்பித்து வைத்த சர்ச்சை! ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

அசுரன் படம் ஆரம்பித்து வைத்த சர்ச்சை! ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

பஞ்சமி நில விவகாரம் குறித்து பேசிய அசுரன் திரைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு , பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அறக்கட்டளை அலுவலகமே பஞ்சமி நிலத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார். இது பெரும் சர்ச்சை ஆனது.

அசுரன் படம் ஆரம்பித்து வைத்த சர்ச்சை! ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

முரசொலி நிலம் பஞ்சம் நிலத்தில்தான் உள்ளது எனதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று ராமதாசை ஸ்டாலின் கேட்க, பதிலுக்கு ராமதாஸ், பஞ்சம் நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேட்க விவகாரம் பெரிதானது.

அசுரன் படம் ஆரம்பித்து வைத்த சர்ச்சை! ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

இதையடுத்து, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி, ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அசுரன் படம் ஆரம்பித்து வைத்த சர்ச்சை! ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி இளந்திரையின் முன் வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளிக்க ஆஜராகவில்லை. ஆகவே, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.