பெருந்துறை அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி… எம்.எல்.ஏ., ஜெயக்குமார் துவங்கி வைத்தார்!

 

பெருந்துறை அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி… எம்.எல்.ஏ., ஜெயக்குமார் துவங்கி வைத்தார்!

ஈரோடு

பெருந்துறை அருகே பட்டக்காரன் பாளையம் ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் பட்டக்காரன் பாளையம் ஊராட்சி பெருமாள் பாளையம் அருகே வெற்றி நகர் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து உள்ளதால், ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன் பேரில், நேற்று பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வெற்றி நகர் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பெருந்துறை அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி… எம்.எல்.ஏ., ஜெயக்குமார் துவங்கி வைத்தார்!

தொடர்ந்து, இரவு 11 மணிக்கு மீண்டும் அங்கு நேரில் சென்ற எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது, 400 அடி ஆழத்தில் தண்ணீர் பீரிட்டு பொங்கியது. தொடர்ந்து, 800 அடி ஆழம் வரை அதிக தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களின் கோரிக்கையை ஏற்று ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்த எம்எல்ஏ-விற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது, வேளாண் கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக ஒன்றிய செயலருமான விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை ஒன்றிய சேர்மன் சாந்தி ஜெயராஜ், பட்டக்காரன் பாளையம் ஊராட்சி தலைவர் ஹேமலதா மற்றும் ஏராளமான பொதுமக்களும் உடனிருந்தனர்