இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்…. அடுத்த தலைவர் யார் என்பதற்கு விடை கிடைக்கும்?

 

இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்…. அடுத்த தலைவர் யார் என்பதற்கு விடை கிடைக்கும்?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியன்று சோனியா காந்தியின் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவியேற்று ஒராண்டு ஒடி விட்ட நிலையிலும் அந்த கட்சியால் முழு நேர தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்…. அடுத்த தலைவர் யார் என்பதற்கு விடை கிடைக்கும்?
சோனியா காந்தி

இந்த சூழ்நிலையில் அரசியல் தலைமையை மாற்றக்கோரியும், காங்கிரஸ் காரிய கமிட்டியின் (செயற்குழு) தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட கட்சியின் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சய் ஷா அண்மையில் தெரிவித்தார். இது அந்த கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் வர வேண்டும் தற்போது பல தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்…. அடுத்த தலைவர் யார் என்பதற்கு விடை கிடைக்கும்?
காங்கிரஸ்

இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தலைமை பிரச்சினைகள் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இன்று நடைபெறும் கூட்டத்தில் கட்சி பதவிகளுக்கு புதிய முகங்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் சில மாநிலங்களில் கட்சி பொறுப்பாளர்கள் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.