எல்லையில் பின்வாங்கும் சீன படைகள்.. நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று முன்தினம் முதல் சீன படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்திய பகுதியில் சீன துருப்புகள் ஊடுருவவில்லை என கூறி மக்களை தவறாக வழிநடத்தியதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரோ கூறியதாவது: சீன ராணுவத்தை பின்னுக்கு தள்ள இந்திய ராணுவம் முயற்சி செய்கிறது. சீன துருப்புகள் பின்வாங்குகின்றன என்ற செய்தியை கேட்டு கட்சி மகிழ்ச்சி அடைகிறது. பிரதமர் இன்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியே வந்து தேசத்துக்கு உரையாற்ற வேண்டும். நாட்டை நம்பிக்கையில் கொண்டு செல்ல வேண்டும். ஆம் நான் தவறு செய்தேன். நான் உங்களை தவறாக வழிநடத்தினேன் என்று நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வேறு சில சொற்களை அவர் பயன்படுத்த விரும்பலாம்.

 பவன் கெரோ

அவர் முன்னால் வந்து நாட்டை நம்பிக்கையுடன் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய கடந்த கால அறிக்கைகளை மட்டுமல்ல தெளிவுப்படுத்த வேண்டியது. அது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் நமது பிரதேசத்தின் பெரும்பகுதி இன்னும் அவர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது, அவர்கள் எவ்வளவு தூரம் வந்தார்கள், இப்போது அவர்கள் எவ்வளவு திரும்ப பெற்றுள்ளார்கள் என்பதை பிரதமர் அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனந்த் சர்மா

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா கூறுகையில், கல்வான் பள்ளதாக்கு பகுதியில் சீன துருப்புகள் பின்வாங்கும் செய்திகள் சாதகமான முன்னேற்றமாகும். படைகள் பின்வாங்குவது மற்றும் விரிவாக்கத்தை குறைப்பது ஆகியவை எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் முன்னுரிமையாகும். பாங்காங் டிசோ ஏரியாவிலும் துருப்புகளை பின்வாங்க இந்திய வலியுறுத்த வேண்டும். அங்கு நிலையான கண்காணிப்பு அவசியம். எல்லைகளில் ஸ்திரத்தன்மையும் சமாதானமும் மற்றும் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த முன்பு இருந்த பழைய நிலையை புதுப்பித்தல் அவசியம் என்பதை சீனா உணர வேண்டும். தேசத்தின் பாதுகாப்பில் உறுதியாக நிற்பது நமது ராணுவத்துக்கு பெருமை என தெரிவித்தார்.

Most Popular

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...