புத்தாண்டு காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்குமா?….ஜனவரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு

புத்தாண்டு காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்குமா?….ஜனவரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு

2019 ஆகஸ்ட் முதல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். அண்மையில், காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் மற்றும் கட்சி சீர்திருத்த நடவடிக்கைககளை மேற்கொள்ளக்கோரி அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு கடிதம் எழுதினர். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் பெரும் பரபரப்புக்கு இடையே கடந்த திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

புத்தாண்டு காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்குமா?….ஜனவரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு
சோனியா காந்தி

அந்த கூட்டத்தில் சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை சமாதானம் செய்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியிலில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சோனியா காந்தியும் ஒப்புக்கொண்டார். அடுத்த 6 மாதத்துக்குள் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது.

புத்தாண்டு காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்குமா?….ஜனவரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு
காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது புதிய தலைவைரை தேர்ந்தெடுப்பதற்காக அதன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வை வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் அழைக்கக்கூடும் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 மூத்த கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.