#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

 

#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுடன் தேசிய கட்சியான பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இருப்பினும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் – திமுக இடையே இழுபறி நீடித்து வந்தது . ஒரு கட்டத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி , நம்மை நடத்தும் விதம் என்று கூறி மேடையிலேயே கண் கலங்கி உள்ளார் . இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல மக்கள் நீதி மய்யமும் காங்கிரசுக்கு தூது அனுப்பியது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணியில் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேற்று இரவு சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படும் இருப்பதாக தகவல் வெளியாகின.

#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக அலுவலகம் வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.