சீனாவின் பெயரை சொல்ல அதிகாரத்தில் இருப்பவர்கள் என் பயப்படுகிறார்கள்?.. மோடியை தாக்கிய காங்கிரஸ்

சீனாவின் பெயரை சொல்ல அதிகாரத்தில் இருப்பவர்கள் என் பயப்படுகிறார்கள்?.. மோடியை தாக்கிய காங்கிரஸ்

டெல்லி செங்கோட்டையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதி முதல் எல்லை கட்டுப்பாடு பகுதி வரை நாட்டின் இறையாண்மையைக்கு சவால் விடுத்துவர்களுக்கு இந்தியாவின் வீரர்கள் பொருத்தமான பதிலடி அளித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் சீனாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மேலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் முழு நாடும் ஒன்றுப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சீனாவின் பெயரை சொல்ல அதிகாரத்தில் இருப்பவர்கள் என் பயப்படுகிறார்கள்?.. மோடியை தாக்கிய காங்கிரஸ்

சீனாவின் பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததை குறிப்பிட்டு அவரையும், மத்திய அரசையும் காங்கிரஸ் கடுமையாக தாக்கியுள்ளது. காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும், 130 கோடி இந்தியர்களும் நமது ஆயுத படைகளால் பெருமை படுகிறோம் மற்றும் நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு முறை தாக்குதல் நடந்தபோதிலும் சீனாவுக்கு பொருத்தமான பதிலடியை வழங்கியதற்காக இந்திய ஆயுத படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். ஆனால் அதிகாரத்தில் அமர்ந்திருபவர்களுக்கு என்ன, சீனாவின் பெயரை குறிப்பிட அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

சீனாவின் பெயரை சொல்ல அதிகாரத்தில் இருப்பவர்கள் என் பயப்படுகிறார்கள்?.. மோடியை தாக்கிய காங்கிரஸ்

இந்திய எல்லைக்குள் சீனா நுழைந்தபோது, சீனாவை பின்வாங்க செய்து நாட்டை பாதுகாக்க என்ன செய்ய போகிறீர்கள் என ஒவ்வொரு இந்தியனும் அரசாங்கத்திடம் கேட்டு இருக்க வேண்டும். இந்த சுதந்திர தினத்தில் அவர்கள் அதை கேட்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வு. எங்கள் அரசாங்கம் ஜனநாயகத்தை நம்புகிறதா? எங்கள் அரசாங்கள் பொது கருத்தை நம்புகிறதா? பேசுவதற்கும், சிந்திப்பதற்கும், பயணிக்க, விரும்பியதை அணிய, வாழ்வாதாரத்துக்கு சம்பாதிக்க எங்களுக்கு சுதந்திரம் உள்ளதா அல்லது தடை செய்யப்பட்டு இருக்கிறதா என கேள்வி எழுப்பது முக்கியம்.

சீனாவின் பெயரை சொல்ல அதிகாரத்தில் இருப்பவர்கள் என் பயப்படுகிறார்கள்?.. மோடியை தாக்கிய காங்கிரஸ்

சுயசார்பு இந்தியாவுக்கான அடித்தளத்தை போட்டது ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நமது சுதந்திர போராட்ட வீரர்கள். ஆனால் பொது நிறுவனங்களை விற்பனை செய்யும், ரயில்வே மற்றும் விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும், எல்.ஐ.சி. முதல் எப்.ஐ.சி. வரை அனைத்தையும் தாக்கும் ஒரு அரசாங்கத்தால் இந்த நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா? நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது அரசாங்கத்தின் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.