கால் குட்டை ஆகிவிடும் நிலைமை..கிண்டல் செய்வார்கள் என்பதால் 21 ஆண்டுகள் அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்படும் மம்முட்டி

 

கால் குட்டை ஆகிவிடும் நிலைமை..கிண்டல் செய்வார்கள் என்பதால் 21 ஆண்டுகள் அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்படும் மம்முட்டி

காலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்படி செய்தால் காலின் நீளம் குறைந்து குட்டையாகிவிடும். ஒரு கால் குட்டையாக இருந்தால் உருவத்தின் தோற்றம் மாறிவிடும். அதைவைத்து பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்களே என்கிற கவலையில் 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி.

கால் குட்டை ஆகிவிடும் நிலைமை..கிண்டல் செய்வார்கள் என்பதால் 21 ஆண்டுகள் அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்படும் மம்முட்டி

மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் அவ்வப்போது நடித்து அசத்தி வருகிறார் மம்முட்டி. இவரது துல்கர் சல்மான் திரைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, மம்முட்டியின் சினிமா மார்க்கெட் இன்னமும் இறங்கவே இல்லை. நாளுக்கு நாள் அது உயர்ந்துகொண்டேதான் போகிறது. தற்போது தனது மகன் துல்கர் சல்மான் தயாரிப்பில் ‘புழு’எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கால் குட்டை ஆகிவிடும் நிலைமை..கிண்டல் செய்வார்கள் என்பதால் 21 ஆண்டுகள் அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்படும் மம்முட்டி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிகழ்ச்சியில் அண்மையில் பங்கேற்றார் மம்முட்டி. அந்த மருத்துவமனையில் நிகழ்ந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் மம்முட்டி பேசியது, மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது, உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

21 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் தனது இடதுகாலின் தசை நார் சேதமடைந்துவிட்டதாம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன மருத்துவர்கள், அறுவை சிகிச்சைசெய்தால் காலில் நீளம் குறைந்துவிடும். குட்டையாகிவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

கால் குட்டை ஆகிவிடும் நிலைமை..கிண்டல் செய்வார்கள் என்பதால் 21 ஆண்டுகள் அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்படும் மம்முட்டி

காலின் நீளம் குறைந்து குட்டையானால், நடிப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். ஒரு கால் மட்டும் குட்டையாக இருந்தால் கிண்டல் செய்வார்களே என்று நினைத்து கவலைப்பட்டிருக்கிறார். அதனால் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டிருக்கிறார்.

ஒருநாள், ஒரு வாரம், ஒரு ஆண்டு அல்ல, 21 ஆண்டுகள் தள்ளிப்போட்டிருக்கிறார் மம்முட்டி. 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்யாமல் அவஸ்தைப்பட்டு வருவதாக அவர் தெரிவித்ததை அடுத்து, ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் அசத்தும் மம்முட்டிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? அதுவும் 21 ஆண்டுகளாக அவஸ்தப்பட்டு வருகிறாரா? என்று நினைத்து அவரது ரசிர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.