பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக ஆசை வந்துவிட்டது : அமைச்சர் கடம்பூர் ராஜு

 

பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக ஆசை வந்துவிட்டது : அமைச்சர் கடம்பூர் ராஜு

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக -பாஜக – பாமக – தேமுதிக கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தன. இதில் பாஜக – அதிமுக கூட்டணியில் ஒரு இணக்கமான சூழலே இருந்து வந்தது. ஆனால் நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் கூறி பரபரப்பை கிளம்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இதுவரை தமிழகத்தில் திமுக vs அதிமுக என்ற நிலை இருந்த நிலையில் இனிவரும் காலத்தில் பாஜக vs திமுக என்ற நிலை மாறி விட்டது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக ஆசை வந்துவிட்டது : அமைச்சர் கடம்பூர் ராஜு

பொதுவாக சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட கட்சிகளின் தலைமையில்தான் தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கும். ஆனால் மரபுக்கு மாறாக தமிழக பாஜக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக ஆசை வந்துவிட்டது : அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக vs பாஜக இடையே போட்டி நிலவுகிறது என்றார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் கனிமொழி க்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப் படுகிறார் என்றும் 2011ல் அதிமுக உடன் கூட்டணி வைத்த தேதிமுக எதிர்க்கட்சியானது. அதேபோல் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வர பாஜகவுக்கு ஆசை வந்திருக்கிறது” என்றார்.