உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவு.. விரைவில் கொரோனாவுக்கு குட்பை..

உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவு.. விரைவில் கொரோனாவுக்கு குட்பை..

கொரோனா வைரஸ்

உலகையே ஆட்டி படைத்து வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்பட உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ரஷ்யாவின் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி கோவிட்-19 எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்தது.

உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவு.. விரைவில் கொரோனாவுக்கு குட்பை..
செக்செனோவ் பல்கலைக்கழகம்

கமலே இன்ஸ்டிடியூட்

இதனையடுத்து, கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி கண்டுபிடித்த கோவிட்-19 எதிரான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நடைமுறைகளை ரஷ்யாவின் முதல் மருத்துவ பல்கலைக்கழமான செக்செனோவ் பல்கலைக்கழகம் தொடங்கியது. கடந்த ஜூன் 18ம் தேதியன்று தன்னார்வலர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியது. தற்போது கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை அந்த பல்கலைக்கழகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவு.. விரைவில் கொரோனாவுக்கு குட்பை..
கோவிட்-19 தடுப்பூசி

செக்செனோவ் பல்கலைக்கழகம்

இது தொடர்பாக இன்ஸ்டிடியூட்டின் டிரான்ஸ்லஷனல் மெடிசின் அண்டு பயோடெக்னாலஜி இயக்குனர் கூறுகையில், தன்னார்வலர்கள் மீதான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளை செக்செனோவ் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. தன்னாவலர்களின் முதல் குழு கடந்த புதன்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். அடுத்த குழு இம்மாதம் 20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவு.. விரைவில் கொரோனாவுக்கு குட்பை..
செக்செனோவ் பல்கலைக்கழகம்

வெற்றிகரமாக நிறைவு

இன்ஸ்டிடியூட்டின் மற்றொரு பிரிவு இயக்குனர் அலெக்சாண்டர் லுகாஷேவ் கூறுகையில், ஆய்வின் இந்த கட்டத்தின் நோக்கம் மனித ஆரோக்கியத்திற்கான தடுப்பூசியின் பாதுகாப்பை காண்பிப்பதாகும். இது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளத. இது தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பூசிகளின் பாதுகாப்பிற்கு ஒத்திருக்கிறது என தெரிவித்தார். தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால் கொரோனா வைரஸ் பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறது.