ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாயம்: தேடும் பணி தீவிரம்!

 

ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாயம்: தேடும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் வசித்து வரும் தம்பதி சுந்தர்- பிரியா. இவர்களுக்கு யோகித் (4), நிக்லேஷ் (2) என்ற மகன்கள் இருந்தனர். இந்த தம்பதி தனது பிள்ளைகளுடன் தாத்தா சின்னச்சாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். தோட்டத்தில் வேலை பார்த்து வரும் சின்னச்சாமி, தனது பேரன்களை அழைத்துக் கொண்டு பெரியாற்றங்கரையில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாயம்: தேடும் பணி தீவிரம்!

அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தோட்டத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சிறுவர்கள் இரண்டு பேரும் பெரியாற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் நிக்லேஷ் நீரில் விழுந்ததை பார்த்த யோகித், சத்தம் போட்டு தனது தாத்தாவை அழைத்துள்ளார். உடனே அங்கு சென்ற சின்னசாமி, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் சிறுவனை எங்கும் காணவில்லையாம்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆற்றில் நீர் அதிகளவு இருப்பதால், இறங்கி தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் இருந்த நபர்கள் சிறுவன் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இருப்பினும், தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியை கைவிடவில்லை. சிறுவனை பற்றிய எந்த தகவலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.