“தியேட்டர்களில் 100% இருக்கை” முதல்வர் உரிய முடிவை எடுப்பார் என்று அமைச்சர் உறுதி!

“தியேட்டர்களில் 100% இருக்கை”  முதல்வர் உரிய முடிவை எடுப்பார் என்று அமைச்சர் உறுதி!

தியேட்டரில் 100% ரசிகர்களுக்கு அனுமதி குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“தியேட்டர்களில் 100% இருக்கை”  முதல்வர் உரிய முடிவை எடுப்பார் என்று அமைச்சர் உறுதி!

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா குறைய தொடங்கியதால் தியேட்டர்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த சமயத்தில் புதிய படங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து திரைத்துறையினர் 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மத்திய உள்துறை இந்த அறிவிப்பு குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளது.

“தியேட்டர்களில் 100% இருக்கை”  முதல்வர் உரிய முடிவை எடுப்பார் என்று அமைச்சர் உறுதி!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் தான் திரைத்துறையினர் கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி 100 % இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதியளித்தார். தற்போது மத்திய அரசு சில ஆலோசனைகளை கூறியுள்ளது என்பதால் இதுகுறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவை எடுப்பார் ” என்றார்.