“சபதம் ஏற்று கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றிய முதல்வர்” – அமைச்சர் பென்ஜமின்

 

“சபதம் ஏற்று கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றிய முதல்வர்” – அமைச்சர் பென்ஜமின்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சியில் மினி கிளினிக் மருத்துவ சேவையை, இன்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் இன்று குத்து விளக்குஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தமிழக அரசின் பரிசு பெட்டகத்தினையும் அவர் வழங்கினார்.

“சபதம் ஏற்று கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றிய முதல்வர்” – அமைச்சர் பென்ஜமின்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மாவட்டத்தில் 53 மினி கிளினிக்குகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாகவும், அதன்படி இதுவரை 12 இடங்களில் தொடங்கி இருப்பதாகவும் கூறினார். மேலும், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மீதமுள்ள மினி கிளினிக்குளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பென்ஜமின், மக்களை பற்றி சிந்திகக் கூடிய அரசாகவும், மக்களுக்காக பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தக் கூடிய அரசாகவும், தமிழக அரசு விளங்குவதாக தெரிவித்தார். எந்த ஒரு உயிரையும் கொரோனாவால் இழக்க தயாராக இல்லை என முதல்வர் சபதம் ஏற்று, அதன்படி சிறப்பாக செயலாற்றி, கொரோனா தொற்றை குறைத்து மக்களை காப்பாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.