பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டார் முதல்வர்!

 

பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டார் முதல்வர்!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் இருக்கும் பிரபலமான ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் இருந்து கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கல சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக போலீசார் நாகையை சேர்ந்த 2 பேரை கைது செய்த நிலையிலும், சிலைகளை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டார் முதல்வர்!

இதை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டனில் அந்த சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தமிழக போலீசாருக்கு தெரிய வந்தது. உரிய ஆதாரங்களுடன் சிலைகளை சிலைகளை திரும்ப ஒப்படைக்குமாறு பிரிட்டன் அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதன் படி, இந்திய தூதரகத்தில் சிலைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 42 ஆண்டுகளுக்கு பின் சிலைகள் தமிழகம் வந்தடைந்தன.

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அந்த சிலைகள் விரைவில் அந்த கோவிலில் வைக்கப்படும் என அதிகாரிகள் அக்கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.