ரூ.1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

 

ரூ.1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ், முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய்கள் மூலமாக மதுரைக்கு குடிநீர் எடுக்கும் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பங்கேற்ற முதல்வர் ரூ.1295.76 கோடி மதிப்பிலான குடிநீர் எடுக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.72 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

ரூ.1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

முதல்வரின் வருகையையொட்டி, மதுரை முழுவதிலும் முதல்வரை வரவேற்கும் வகையில் போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மதுரை முழுவதிலும் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மதுரைக்கு 125 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட்டிருக்கும் திட்டத்தின் மூலமாக 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.