ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

 

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

துணை முதல்வர் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, சென்னை மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக நினைவிடம் கட்டுப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணி தொடங்கிய நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் தானே திறந்து வைக்கவிருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் தொண்டர்கள் வந்து குவிந்தனர். இந்த நிலையில், ஓபிஎஸ் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்திலும், திருவுருவப் படத்திலும் மலர் தூவி முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும், அதிமுக மூத்த தலைவர்களும் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ‘மக்களால் நான் மக்களுக்காக நான் வாசகம்’ என்ற பொறிக்கப்பட்டுள்ளது.