புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அண்மையில் தமிழகத்தின் 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும், வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியும், நெல்லையிலிருந்து தென்காசி மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது. அதன் படி, அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மற்றும் ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.