நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: சென்னை வந்தார் தலைமை தேர்தல் ஆணையர்!

 

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: சென்னை வந்தார் தலைமை தேர்தல் ஆணையர்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் சென்னை வந்தடைந்தனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு, தேர்தலை 3 கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது.

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: சென்னை வந்தார் தலைமை தேர்தல் ஆணையர்!

இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கிய தமிழக தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான 100% வாக்கு இயந்திரங்களை தயார் செய்துள்ளது. கொரோனா காலக்கட்டம் என்பதால் வாக்குச் சாவடிகளை அதிகரிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் குழுவினர் இன்றும் நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர். சுனில் அரோரா நாளை தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோருடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.