மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதே சவாலாக உள்ளது! – புதுவை முதல்வர் வேதனை

மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதே சவாலாக உள்ளது! – புதுவை முதல்வர் வேதனை

புதுச்சேரி மாநிலத்துக்கு வர வேண்டிய நியாயமான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதே ஒவ்வொரு ஆண்டும் சவாலாக உள்ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினம் புதுச்சேரியிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. உப்பளம் மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியேற்றிப் பேசினார்.

மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதே சவாலாக உள்ளது! – புதுவை முதல்வர் வேதனை
அப்போது அவர், “உலக அளவில் கொரோனா பரவல் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். மத்திய அரசு நமக்கு அளித்து வரும் நிதி வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. மற்றொரு புறம் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பெறுவது என்பதே சவாலாக உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதே சவாலாக உள்ளது! – புதுவை முதல்வர் வேதனை
இதனுடன் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட நிதி தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும், இந்த அரசு எல்லா பிரச்னைகளையும் தீவிரமாக எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதே சவாலாக உள்ளது! – புதுவை முதல்வர் வேதனை
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே புதுச்சேரியும் பல்று சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மக்களின் ஆதரவோடு கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன்” என்றார்.