ஜூன் 18 முதல் மீண்டும் முழு லாக்டவுனா? அதெல்லாம் நம்பாதீங்க…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு

ஜூன் 18 முதல் மீண்டும் முழு லாக்டவுனா? அதெல்லாம் நம்பாதீங்க…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த மே மாதம் 31ம் தேதி வரை நாடு தழுவிய லாக்டவுனை மொத்தம் 4 கட்டங்களாக நடைமுறைப்படுத்தியது. ஆனால் இம்மாதம் தொடக்கம் முதல் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தி வருகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் பகுதிகளில் மட்டுமே லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்படவில்லை.

ஜூன் 18 முதல் மீண்டும் முழு லாக்டவுனா? அதெல்லாம் நம்பாதீங்க…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், சமீபகாலமாக நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மீண்டும் நாடு தழுவிய முழு லாக்டவுனை அமல்படுத்துமோ என்ற சந்தேகம் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பேசப்பட்டது. இந்த மாநில அரசுகள் மறுத்து வந்தன. இந்த சூழ்நிலையில், பேஸ்புக்கில் மத்திய அரசு வரும் 18ம் தேதி முதல் டெல்லி என்.சி.ஆர்-ல் மீண்டும் முழு லாக்டவுனை விதிக்க உள்ளது என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது. இது டெல்லிவாசிகள் மத்தியில் ஒரு வித அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஜூன் 18 முதல் மீண்டும் முழு லாக்டவுனா? அதெல்லாம் நம்பாதீங்க…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு

இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ டிவிட்டரில், ஜூன் 18ம் தேதி முதல் கடுமையான லாக்டவுன் என பேஸ்புக்கில் வெளியான செய்தி போலி. அது போன்ற எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. வதந்தி பரப்புபவர்களை பற்றி எச்சரிக்கையாக இருங்கள் என பதிவு செய்து இருந்தது. அதனுடன் பேஸ்புக் வெளியான போலி செய்தியையும் பதிவேற்றம் செய்து இருந்தது.