கேரளா உள்பட 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு பகீர் தகவல்

கேரளா உள்பட 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு பகீர் தகவல்

கேரளா உள்பட 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லால் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 மாதங்களாக கேரளாவில் 7 மாவட்டங்கள், மணிப்பூரில் 5 மாவட்டங்கள் மற்றும் மேகலாயாவில் 3 மாவட்டங்கள் உள்பட நாட்டில் மொத்தம் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கேரளா உள்பட 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு பகீர் தகவல்
லாவ் அகர்வால்

ஜூலை 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த மே 5ம் தேதி முதல் 11 வரையிலான காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3.87 லட்சமாக இருந்தது. ஆனால் ஜூலை 21 முதல் 27ம் தேதி வரையிலான காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 38,090ஆக குறைந்து விட்டது.

கேரளா உள்பட 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு பகீர் தகவல்
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த சில வாரங்களாக சரிவின் (கொரோனா பாதிப்பு குறைவு) வீதத்தில் மந்தநிலை அல்லது குறைப்பு ஏற்பட்டுள்ளது. இது கவலைக்குரியாக பகுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், பொது இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் மற்றும் கூட்டங்களை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்றினால் மட்டுமே கொரானாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.