ஜூலை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு….. மத்திய அரசு திட்டம்

 

ஜூலை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு….. மத்திய அரசு திட்டம்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாத மத்தியில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுன் நடைமுறையில் உள்ளதால் பள்ளிகள் திறக்கவில்லை. இந்நிலையில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் நேற்று முதல் உள்நாட்டு போக்குவரத்துக்கும் தொடங்கி விட்டது.

ஜூலை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு….. மத்திய அரசு திட்டம்

இந்த நிலையில் வரும் ஜூலை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்துக்கு பிறகு மண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்கும் யோசனையில் மத்திய அரசு உள்ளதாக மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் பச்சை மற்றும் ஆரஞ்சு மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர் மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் பள்ளிகள் திறக்கப்படும்.

ஜூலை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு….. மத்திய அரசு திட்டம்

தகவல்கள்படி, தொடக்க வகுப்பு மாணவர்கள் (1 முதல் 7ம் வகுப்பு வரை) பள்ளிகளுக்கு செல்ல கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும். பள்ளிகள் முழு வீச்சில் செயல்பட தொடங்கிய பிறகே தொடக்க வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர முடியும். சிறு குழந்தைகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடுமையான விதிகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கமுடியாது என்பதால் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தற்சமயம் வீட்டில் வைக்கப்படுவார்கள். அவர்கள் வீட்டிலிருந்து படிப்பை தொடருவார்கள் என தெரிகிறது