செய்திவாசிப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

செய்திவாசிப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டி.வி செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல டி.வி செய்தி வாசிப்பாளர் வரதராஜன், தனக்குத் தெரிந்த ஒருவருக்கு நேர்ந்த கொரோனா அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முயற்சி செய்ததாகவும் ஆனால் படுக்கை இல்லை அழைத்து வராதீர்கள் என்று எல்லா மருத்துவமனைகளும் கைவிரித்ததாகவும் கூறியிருந்தார். மேலும், கொரோனா நமக்கு வராது என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள். மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியிருந்தார்.

செய்திவாசிப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்அரசு மீது அவதூறு பரப்பியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பயந்துபோன வரதராஜன், அரசைக் குற்றம்சாட்டிப் பதிவிடவில்லை, அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.

செய்திவாசிப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செய்தி வாசிப்பாளர் திரு. வரதராஜன் கோவிட்19 நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததைப் பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெறுக!” என்று கூறியுள்ளார்.