120 அடி உயர விவேகானந்தர் சிலை நிறுவ கர்நாடக பா.ஜ.க. அரசு திட்டம்… சிலை வைக்க இது நேரம் இல்ல – பொங்கும் காங்கிரஸ்

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் 3 ஏக்கர் இடத்தில் 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை நிறுவ முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுகள் போராடி வரும் இந்த சூழ்நிலையில் விவேகானந்தர் சிலை வைக்கும் கர்நாடக அரசின் திட்டம் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

விவேகானந்தர் சிலை கட்டுவது தொடர்பாக அம்மாநில வீட்டுவசதி மேம்பாட்டு துறை அமைச்சர் வி. சோமன்னா கூறுகையில், குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை போன்று பெங்களூரின் புறநகரில் உள்ள ஜிகானியில் உள்ள முத்யலா மடுவ் நீர்வீழ்ச்சிக்கு அருகில், பன்னெர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் சுவாமி விவேகானந்தர் சிலை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு முன்னுரிமை இல்லை. சிலை கட்டுவதற்கான நேரம் இல்லை. மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரம். மாநிலத்தை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை நாம் பார்க்க வேண்டும். இன்று வரை முதல்வர் ஒரு விவசாயிகள் கூட்டத்தை கூட ஏற்பாடு செய்யவில்லை. ஒரு பைசா கூட விவசாயிகள் அல்லது தொழிலாளர்களுக்கு போய் சேரவில்லை. அரசாங்கத்திடம் போதுமான நிதி இருக்கும்போது சிலையை கட்டுங்கள். இது போன்ற செயல்களுக்கான நேரம் இதுவல்லை. மாநிலத்தையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Most Popular

ராஜஸ்தானில் இருந்த இரவில் காரில் வந்த அபின்… மதிப்பு ரூ.15 லட்சம்… சிக்கிய பாஜக நிர்வாகி

போதைப்பொருளை கடத்தியதாக பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அக்கட்சினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்....

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அலையே இன்னும் ஓயாத நிலையில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியிருப்பது அடுத்தகட்ட பரபரப்பை...

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி, 5 ரூபாய் இருந்தா நீங்களும் பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

பழைய பொருட்களை விற்கும் சில வெப்சைட்டுகளிடம் பழைய ஐந்து ரூபாய் கொடுத்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம் . உங்ககிட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டு ,அதுவும் 786 அப்படின்னு எண் முடியற மாதிரி இருக்கணும்...

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!