சென்னையில் தங்கைக்காக ஜெயிலுக்குச் சென்ற அண்ணன் – தனிஒருவனாக ரவுடியை கொலை செய்த பகீர் பின்னணி

 

சென்னையில் தங்கைக்காக ஜெயிலுக்குச் சென்ற அண்ணன் –  தனிஒருவனாக ரவுடியை கொலை செய்த பகீர் பின்னணி

சென்னை விமான நிலையத்தின் அருகே ஆலந்தூர் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஊரடங்கால் ஆலந்தூரும் அதன் அருகே உள்ள ஆதம்பாக்கமும் அமைதியாக இருந்தது. ஆதம்பாக்கம் ஆபீஸர்ஸ் காலனி மண்ணடி அம்மன் கோயில் 2-வது சந்துவில் குடியிருக்கும் எட்வின் என்பவரின் வீட்டில் தலைநசுங்கி ரவுடி மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவல் காட்டு தீ போல பரவியது.

ரவுடி மணிகண்டனை கொலை செய்து விட்டார்களா என்று அவர் குடியிருக்கும் ஆதம்பாக்கத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. மணிகண்டனின் அம்மாவின் பெயர் பிரபலம். மணிகண்டனும் 2010-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றவர். அதன்பிறகு மணிகண்டனின் பெயரோடு ரவுடி என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது. அப்படிப்பட்ட மணிகண்டன் கொலை செய்யப்பட்டதும் அவரின் ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சி.

சென்னையில் தங்கைக்காக ஜெயிலுக்குச் சென்ற அண்ணன் –  தனிஒருவனாக ரவுடியை கொலை செய்த பகீர் பின்னணி

மணிகண்டன் கொலை செய்யப்பட்ட தகவலறிந்ததும் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன் சம்பவ இடத்துக்கு வந்தார். மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு மணிகண்டனின் மரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் தலையில் அம்மிக் கல் போடப்பட்டு அவர் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்தது. மணிகண்டன் இறந்து கிடந்த வீடு அவரின் மாமா மகன் எட்வினுக்கு சொந்தமானது. அவர் வீட்டில் இல்லை. அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் தங்கைக்காக ஜெயிலுக்குச் சென்ற அண்ணன் –  தனிஒருவனாக ரவுடியை கொலை செய்த பகீர் பின்னணி

எட்வின் குறித்து போலீசார் விசாரித்த போது அவரும் மணிகண்டனும் நள்ளிரவில் மது அருந்திய தகவல் தெரிந்தது. அதனால் மதுபோதையில் மணிகண்டனை எட்வின் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. அதற்கு விடை கிடைக்க எட்வின் சிக்க வேண்டும். அதனால் எட்வினை போலீசார் பல இடங்களில் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில் எட்வின் தலைமறைவாக இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்குச் சென்ற போலீசார் எட்வினைப் பிடித்து காவல் நிலையத்து அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது. மணிகண்டனின் மாமா குட்டன் என்கிற ஆபிரகாம். இவரின் மகன்தான் எட்வின். பிளம்பராக வேலைப்பார்த்து வந்தார். மணிகண்டனுக்கு திருமணமாகி அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தனிமையில் இருந்த மணிகண்டனுக்கு மீண்டும் திருமணம் செய்ய பெண் தேடினர். ரவுடி மணிகண்டனுக்கு பெண் கிடைக்கவில்லை. அதனால் எட்வினின் தங்கையை திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார் மணிகண்டன். ஆனால் எட்வினுக்கு தன்னுடைய தங்கையை மணிகண்டனுக்கு திருமணம் செய்து கொடுக்க மனமில்லை.

அதே நேரத்தில் அந்தத் தகவலை மணிகண்டனிடம் ஓப்பனாகவும் தைரியமாகவும் சொல்ல முடியாமல் எட்வின் தவித்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் எட்வின் நேற்று வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது மணிகண்டன் தனியாக எட்வின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் மது அருந்தியுள்ளனர். மணிகண்டனுக்கு மதுவை அதிகமாக ஊற்றிக் கொடுத்துள்ளார் எட்வின். போதையில் தள்ளாடிய மணிகண்டனால் தன்னுடைய வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. போதை தலைக்கெறியதும் அவர் எட்வின் வீட்டிலேயே தூங்கினார். ஆனால் எட்வினுக்கு தூக்கம் வரவில்லை.

சென்னையில் தங்கைக்காக ஜெயிலுக்குச் சென்ற அண்ணன் –  தனிஒருவனாக ரவுடியை கொலை செய்த பகீர் பின்னணி

தன்னுடைய தங்கையை மணிகண்டனுக்கு திருமணம் செய்து கொடுத்தால் அவளின் வாழ்க்கையை கேள்வி குறியாகிவிடும். தெரிந்தே அவளை பாழுங்கிணற்றில் தள்ளிவிட விரும்பாத எட்வின், என்ன செய்யலாம் என இரவு முழுவதும் யோசித்துள்ளார். அப்போதுதான் எட்வினுக்கு ஒரு ஐடியா வந்துள்ளது. மணிகண்டன் உயிரோடு இருந்தால்தானே தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அவரைக் கொலை செய்துவிட்டால் தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். தங்கையையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என கருதிய எட்வின், மணிகண்டனை எப்படி கொலை செய்யலாம் என யோசித்தபோது வீட்டிலிருந்த அம்மி கல்லை தலையில் போட்டு விடலாம் என்று முடிவு செய்துள்ளார்.

சென்னையில் தங்கைக்காக ஜெயிலுக்குச் சென்ற அண்ணன் –  தனிஒருவனாக ரவுடியை கொலை செய்த பகீர் பின்னணி

இதையடுத்து அம்மி கல்லை எடுத்துக் கொண்டு வந்த எட்வின், அதை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனின் தலையில் போட்டுள்ளார். அதில் அவரின் தலை நசுங்கி ரத்தம் கொட்டியுள்ளது. தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. அதன்பிறகு ரத்தக்கறைப்படிந்த டிரஸை கழற்றி வைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மணிகண்டனின் தொழில் எதிரிகள் அவரைக் கொலை செய்துவிட்டதாக நம்ப வைக்க எட்வின் முடிவு செய்துள்ளார். ஆனால் ஆதம்பாக்கம் போலீசா…