‘தாலி கட்டும் போது கதறி அழுத மணப்பெண்’…கலங்கிய உறவினர்கள்!

‘தாலி கட்டும் போது கதறி அழுத மணப்பெண்’…கலங்கிய உறவினர்கள்!

குன்றத்தூர் அருகே தாலி கட்டும் போது மணப்பெண் கதறி அழுததை கண்டு, உறவினர்களும் அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தாலி கட்டும் போது கதறி அழுத மணப்பெண்’…கலங்கிய உறவினர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு தாம்பரத்தை சேர்ந்த துளசி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நேற்று குன்றத்தூர் முருகன் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. தாலி கட்டும் சமயத்தில் அந்த மணப்பெண், கீழே குனிந்து கதறி அழுதிருக்கிறார். உறவினர்கள் அவரை சிரிக்க முயற்சி செய்தும், அவர் சிரிக்காததால் உறவினர்களும் கண் கலங்கியுள்ளனர்.

‘தாலி கட்டும் போது கதறி அழுத மணப்பெண்’…கலங்கிய உறவினர்கள்!

மணப்பெண்ணின் தந்தை சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டாராம். அதன் பிறகு தனது 3 பெண் குழந்தைகளையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் மணப்பெண்ணின் தாயார் வளர்த்து வந்திருக்கிறார். திருமணம் முடிந்து தனது தங்கைகளையும் தாயாரையும் விட்டு போக வேண்டும் என்பதை எண்ணி, துளசி கண்கலங்கியதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.