செல்போனை எடுக்க பாறைகளுக்குள் தலையை விட்ட சிறுவன்! – 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

 

செல்போனை எடுக்க பாறைகளுக்குள் தலையை விட்ட சிறுவன்! – 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

திருச்சி மாவட்டத்தில் பாறைகளுக்கு நடுவே விழுந்த செல்போனை எடுக்க தலையை உள்ளே விட்டு மாட்டிக்கொண்ட சிறுவனை இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

செல்போனை எடுக்க பாறைகளுக்குள் தலையை விட்ட சிறுவன்! – 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்புதிருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி. பள்ளிக்கூடம் மூடப்பட்டிருப்பதால் தன்னுடைய மகன் ஆதித்யாவை (13) ஆடு மேய்க்க அனுப்பியிருந்தார். அந்த பகுதியில் உள்ள கரட்டு மலையில் சிறுவன் ஆதித்யா ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது செல்போன் தவறி பாறை விரிசல்களுக்கு நடுவே விழுந்துவிட்டது. இதனால் செல்போனை எடுக்க ஆதித்யா முயற்சி செய்துள்ளார். உடலை உள்ளே விட்டு செல்போனை எடுக்க முயற்சித்த போது தலை உள்ளே மாட்டிக்கொண்டது.

செல்போனை எடுக்க பாறைகளுக்குள் தலையை விட்ட சிறுவன்! – 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்புதலை மாட்டிக்கொள்ளவே ஆதித்யா உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளான். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆதித்யாவை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் தலை வரவில்லை. இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினருக்கு தகவ் தெரிவிக்கப்பட்டது. துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி கயிறு கட்டி ஆதித்யாவை மீட்டனர். உடனடியாக சிறுவன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.