மணல் கொள்ளையர்களால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

 

மணல் கொள்ளையர்களால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

பாலாற்று வெள்ளத்தில் சிக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணல் கொள்ளையர்களால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. ஏரி, ஆறு, குளம் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் நீர் நிலைகளில் நிரம்பி வழியும் தண்ணீரை காண பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்ததையும் பல இடங்களில் காண முடிந்தது.

மணல் கொள்ளையர்களால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதை காண மக்கள் திரளாக வந்திருந்தனர் . அப்போது உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ரித்தீஷ் என்ற 11 வயது சிறுவன் ஆற்றில் நீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய பெரிய பள்ளத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான். இதையடுத்து சிறுவனை மீட்ட அப்பகுதியினர் அவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டத்திற்குப் புறம்பாக பல இடங்களில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்தும் ஆபாயகரமான பெரிய பள்ளங்களின் ஆபத்தை உணராமல் மக்கள் ஆற்றில் இறங்கி விளையாட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.