லட்டு போல இருந்த வெடிகுண்டை கடித்த சிறுவன்… துடித்து விழுந்த பரிதாபம்!

காட்டு பன்றியை வேட்டையாட வீசப்பட்ட வெடிகுண்டை லட்டு என நினைத்து கடித்த எட்டு வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலையில் செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் தீபக் என்ற 3ம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுவன் .கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபக்கும் அவரின் நண்பர் மணிகண்டன் ஆகியோர் கரியமங்கலம் வன எல்லையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தனது தாத்தாவுக்கு உணவு கொண்டு போய் கொடுத்தனர் . அப்பகுதியில் சிறிது நேரம் விளையாடிய பிறகு, இரண்டு நண்பர்களும் வீடு திரும்பி கொண்டிருந்தனர் .அப்போது அந்த காட்டு பகுதியில் காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக சில வேட்டைகாரர்கள் நாட்டு வெடிகுண்டின் மீது நெய் பூசி லட்டு போல தயாரித்து வீசியுள்ளனர்.

அதை பார்த்த தீபக் அதில் நெய் வாசனை அடித்ததால் ஏதோ இனிப்பு லட்டு என நினைத்து அதை வாயில் வைத்து கடித்தார் .அவர் அதை கடித்தவுடன் அது பயங்கரமாக வெடித்தது .அப்போது அந்த 8 வயது சிறுவனின் வலது கை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனால் அந்த சிறுவன் துடி துடித்து கத்தினான் .
தீபக் தரையில் விழுந்து துடிப்பதை பார்த்த மணிகண்டன் இந்த விஷயத்தை உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்க ஓடினார் . தகவலறிந்து ஓடிவந்த உள்ளூர்வாசிகள் தீபக்கை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .பிறகு அவர் அங்கிருந்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . பின்னர் அவர் அங்கிருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Most Popular

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...