ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி தனது பத்தொன்பதாவது வயதிலேயே இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். 30 வருடங்கள் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எல்லைப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். இராணுவ வீரர் திருமூர்த்தி கடந்த 26ம் தேதி நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் துப்பாக்கி பாய்ந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் இறுதிசடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

முன்னதாக பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.