`ஏரியில் வீசப்பட்ட உடல்; 3 நாட்கள் மிதந்த கொடுமை!’- கட்டிட தொழிலாளிக்கு நடந்த துயரம்

 

`ஏரியில் வீசப்பட்ட உடல்; 3 நாட்கள் மிதந்த கொடுமை!’- கட்டிட தொழிலாளிக்கு நடந்த துயரம்

திருவாலங்காடு அருகே தலைமையில் வெட்டப்பட்ட நிலையில் ஏரியில் வாலிபரின் உடலை வீசி சென்ற கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

`ஏரியில் வீசப்பட்ட உடல்; 3 நாட்கள் மிதந்த கொடுமை!’- கட்டிட தொழிலாளிக்கு நடந்த துயரம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த மணவூர் செல்லும் சாலையில் கன்னி கோயில் அருகில் ஏரிக்கரை பகுதியில் வாலிபரின் சடலம் மிதப்பதாக அந்த பகுதி ஆடு, மாடு மேய்க்கும் பொதுமக்கள் திருவலாங்காடு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “இறந்த வாலிபர் பெயர் வெங்கடேஷ் (30). இவர் பழையனூர் பகுதியை சேர்ந்தவர். கட்டிட பணிகள் செய்து வந்துள்ளார். இவரது பின்மண்டையில் ஐந்து முறைக்கு மேல் வெட்டப்பட்டு ஏரியில் வீசி சென்று உள்ளார்கள். மூன்று தினங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் ஏரியில் தண்ணீரில் இருந்து வெங்கடேசன் உடல் மிதந்து உள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தற்போது விசாரணை மேற்கொண்டு உள்ளோம்” என்றனர்.

`ஏரியில் வீசப்பட்ட உடல்; 3 நாட்கள் மிதந்த கொடுமை!’- கட்டிட தொழிலாளிக்கு நடந்த துயரம்

சில தினங்களுக்கு முன்பு சில வாலிபர்கள் அதே பகுதியில் கத்தியை காட்டி வாகனங்கள் வரும் நபர்களிடம் பணம் பறித்து மிரட்டி வருவதாக பொதுமக்கள் கூறிவருகிறார்கள். இந்த கொலை சம்பவத்திற்கு அந்த பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் இரண்டு இளைஞர்களை பிடித்து சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

இறந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் , வெங்கடேஷ் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் திருவலங்காடு காவல்துறையினர் இரவு நேரத்தில் திருவாலங்காடு பகுதியில் கிராமங்களில் இரவு ரோந்து பணிகளில் இருந்தால் இப்படி சம்பவங்கள் நடைபெறாது என்று திருவலாங்காடு ஒன்றிய கிராம மக்கள் கூறுகின்றனர்.