நான் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது.. தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய படகு உரிமையாளர்

நான் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது.. தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய படகு உரிமையாளர்

ஜம்மு அண்டு காஷ்மீரின் தால் ஏரியில் மிதக்கும் (படகு வீடு) ஆம்புலன்ஸ் சேவையை கொரோனாவிலிருந்து மீண்ட படகு வீடு உரிமையாளர் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீநகரரை சேர்ந்த படகு வீடு உரிமையாளர் தாரிக் அகமது பட்லூ. இவர் தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இதனால் தால் ஏரியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவை குறித்து பட்லூ கூறியதாவது: அதிகரித்து வரும் வழக்குகள் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் வீடுகளின் நிலைமையை கருத்தில் கொண்டு மக்களுக்காக இந்த வசதியை அமைத்துள்ளேன்.

நான் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது.. தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய படகு உரிமையாளர்
தாரிக் அகமது பட்லூ

உதவி வேண்டி எனக்கு பல தொலைப்பேசி அழைப்புகள் வந்தன. அவர்களின் தேவைக்கேற்ப சரியான உதவியை வழங்குகிறேன். தற்போது மிதக்கும் ஆம்புலன்ஸில் முதலுதவி, ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி, பிபி செட் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் உள்ளன. வைரஸ் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முன்வருவதில் மக்களுக்கு பயம் இருக்கிறது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது எனது படகு வீட்டில் என்னை அழைத்து செல்ல யாரும் தயாராக இல்லை.

நான் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது.. தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய படகு உரிமையாளர்
மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவை

ஆனால் தற்போதைய மிதக்கும் ஆம்புலன்ஸ் வருகை, கடலில் ஒரு சிறிய துளியாக இருந்தாலும் நிலைமை மேற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆம்புலன்சில் சைரன் மற்றும் ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன. அவை முகக்கவசம் மற்றும் பிற முக்கிய விஷயங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அறிவிப்புகளுக்கு பயன்படுத்தபடுகிறது. இந்த ஆம்புலன்ஸ் மக்களுக்கு நட்பாக இருக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இன்னும் 3 நாட்களுக்குள் ஆக்சிஜன் வசதியும் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.