“திமுக வீழ்த்தப்பட வேண்டும்; அதற்கான வியூகங்களை வகுத்துள்ளோம்” : எல். முருகன் திட்டவட்டம்!

 

“திமுக வீழ்த்தப்பட வேண்டும்; அதற்கான வியூகங்களை வகுத்துள்ளோம்” : எல். முருகன் திட்டவட்டம்!

விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்ட நன்மைகளை பாஜகவினர் எடுத்துரைப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

“திமுக வீழ்த்தப்பட வேண்டும்; அதற்கான வியூகங்களை வகுத்துள்ளோம்” : எல். முருகன் திட்டவட்டம்!

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “திமுக வீழ்த்தப்பட வேண்டும், அதற்கான வியூகங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறது அதன் அடிப்படையில்தான் நாங்கள் கருத்து கூற முடியும். நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி தான் இந்த தேர்தலில் வெற்றி பெறும். நடிகர் ரஜினிகாந்த் தேசப்பற்றாளர், தேசிய பார்வை கொண்டவர். அவர் கட்சி தொடங்குவது அவர் உரிமை” என்றார்.

“திமுக வீழ்த்தப்பட வேண்டும்; அதற்கான வியூகங்களை வகுத்துள்ளோம்” : எல். முருகன் திட்டவட்டம்!

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வெற்றிவேல் யாத்திரைக்கு பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. யாத்திரையை மீண்டும் இன்று தொடங்கவுள்ளோம். டிசம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறும். வரும் 8 ஆம் தேதி முதல் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்ட நன்மைகளை பாஜகவினர் எடுத்துரைப்பார்கள்” என்றார்.