திமுகவை விளாசி எடுத்த பாஜக – இன்னும் மிச்சமிருக்குதாம்

 

திமுகவை விளாசி எடுத்த பாஜக – இன்னும் மிச்சமிருக்குதாம்

வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதையே வேண்டும் என்று சொல்வதும், அவர்களே கொண்டு வந்துவிட்டு அவர்களே வேண்டாம் என்று சொல்வதுமான திமுகவின் இரட்டை வேடங்களைச்சொல்லி விளாசி எடுத்திருக்கிறார் தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. இதில், ‘தொடரும்..’என்று வேறு போட்டு, விளாசி எடுக்க வேண்டியது இன்னும் மிச்சமிருக்குது என்கிறார்.

திமுகவை விளாசி எடுத்த பாஜக – இன்னும் மிச்சமிருக்குதாம்

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டை ஒழித்தது யாரு? திமுக.
வேண்டும் என போராட்டத்தை தூண்டியது யாரு? தி மு க#

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை அனுமதித்தது யாரு? தி மு க.
வேண்டாம் என மக்களை தூண்டியது யாரு? தி மு க#

ஸ்டெர்லைட்டை அனுமதித்தது யாரு? தி மு க.
மூட வேண்டும் என தூண்டியதை யாரு? தி மு க #

நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு?தி மு க.
வேண்டாம் என சொல்வது யாரு? தி மு க#

திமுகவை விளாசி எடுத்த பாஜக – இன்னும் மிச்சமிருக்குதாம்

மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது யாரு? தி மு க .
வேண்டாம் என சொன்னது யாரு? தி மு க.#

கச்சதீவை தாரைவார்த்தது யாரு? தி மு க .
மீட்க வேண்டும் என கூக்குரலிடுவது யாரு? தி மு க.#

ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை கொன்றதற்கு காரணம் யாரு? தி மு க.
அதை கண்டித்து ஒன்றரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது யாரு?தி மு க#

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு காரணம் யாரு? தி மு க.
கட்ட அனுமதித்து விட்டு கட்டக்கூடாது என்று நாடகமாடுவது யாரு?தி மு க#

தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சொன்னது யாரு? தி மு க.
ஆனால், இப்போது செலுத்தி கொள்ளுங்கள் என்று சொன்னது யாரு ? தி மு க.#

ஊரடங்கு கூடாது என்று சொன்னது யாரு? தி மு க.
ஊரடங்கு தேவை என்று இப்போது சொல்வது யாரு?தி மு க.#

தொடரும்…………. என்று தெரிவித்திருக்கிறார்.