‘பீகாரில் வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

‘பீகாரில் வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘பீகாரில் வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலின், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவ.3 மற்றும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

‘பீகாரில் வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

அதே போல, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் மகா கூட்டணி அமைத்து நேரடியாக களம் காணுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தந்த கட்சி தலைவர்களே பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனிடையே தேர்தல் நெருங்குவதால் , காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

‘பீகாரில் வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

இந்த நிலையில், பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பீகாரில் வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி என்றும் தேர்தல் அறிக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.