கர்நாடகாவின்புதிய முதல்வர் யார்? பிரகலாத் ஜோஷி உள்பட 8 பேர்களில் ஒருவருக்கு வாய்ப்பு

 

கர்நாடகாவின்புதிய முதல்வர் யார்? பிரகலாத் ஜோஷி உள்பட 8 பேர்களில் ஒருவருக்கு வாய்ப்பு

கர்நாடகாவில் புதிய முதல்வராக பிரகலாத் ஜோஷி உள்பட 8 பேர்களில் ஒருவரை பா.ஜ.க. தலைமை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை அவர் முதல்வராக தொடருவார். பா.ஜ.க.வின் தேசிய தலைமை புதிய முதல்வரை ஒரு சில தினங்களில் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் புதிய முதல்வர் தேர்வு அவ்வளவு எளிதானதாக இருக்காது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் முக்கியமான 3 சமுதாயங்களான லிங்காயத், வோக்கலிகா மற்றும் பிராமண சமூகங்களை பேலன்ஸ் செய்யும் வகையில் புதிய முதல்வர் தேர்வு அமைய வேண்டும்.

கர்நாடகாவின்புதிய முதல்வர் யார்? பிரகலாத் ஜோஷி உள்பட 8 பேர்களில் ஒருவருக்கு வாய்ப்பு
பி.எஸ்.எடியூரப்பா

எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினால், புதிய முதல்வராக ஆக வாய்ப்புள்ளதாக கடந்த ஒரு வாரமாக சில பிரபலங்கள் பெயர்கள் அடிப்பட்டது. அந்த வகையில் தற்போது கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள 7 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
கர்நாடக அமைச்சர் முருகேஷ் நிராணி
எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட்
மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை
துணை முதல்வர் சி.என். அஷ்வாத் நாரயன்
தேசிய பொதுச்செயலாளா சி.டி.ரவி
தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ்

கர்நாடகாவின்புதிய முதல்வர் யார்? பிரகலாத் ஜோஷி உள்பட 8 பேர்களில் ஒருவருக்கு வாய்ப்பு
பா.ஜ.க.

இவர்களை தவிர்த்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே ககேரி புதிய முதல்வர் தேர்வில் கறுப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். 6 முறை எம்.எல்.ஏ., பிராமண வகுப்பை சேர்ந்தவர், சுத்தமான மனிதர் மற்றும் சட்டப்பேரவை அதிகாரத்துடன் நடத்தி வருகிறார் என்று பெயர் விஸ்வேஸ்வர் ஹெக்டேவுக்கு உள்ளது. அதேசமயம் பா.ஜ.க. எப்போதும் யாரும் எதிர்பாராத வண்ணம் செயல்படும். உதாரணமாக உத்தரகாண்ட் புதிய முதல்வர் தேர்வை சொல்லலாம். அங்கு யாரும் எதிர்பாராத வண்ணம் புஷ்கர் சிங் தாமியை முதல்வராக பா.ஜ.க. நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.