விவசாயிகள் சோர்வடைவார்கள்… போராட்டம் முடிவுக்கு வரும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது… அசோக் கெலாட்

 

விவசாயிகள் சோர்வடைவார்கள்… போராட்டம் முடிவுக்கு வரும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது… அசோக் கெலாட்

விவசாயிகள் சோர்வடைவார்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று பா.ஜ.க. அரசு நினைக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காஙகிரஸ் கட்சியினர் நடத்திய போராட்ட கூட்டத்தில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: குளிரில் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 39 நாட்கள் கடந்து விட்டது. விவசாயிகள் என்னவாக இருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்கலாம். மத்திய அரசு மிகவும் உணர்ச்சியற்றதாக உள்ளது. விவசாயிகள் சோர்வடைவார்கள், போராட்டம் முடிந்து விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அரசு காலத்தை கடத்துகிறது. போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமே உட்கார்ந்து இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது.

விவசாயிகள் சோர்வடைவார்கள்… போராட்டம் முடிவுக்கு வரும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது… அசோக் கெலாட்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

நாட்டின் 6.5 லட்சம் கிராமங்களிலிருந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒற்றுமையாக நிற்கின்றனர். நாங்கள் விவசாயிகளுடன் ஒன்றாக நிற்கிறோம். நாட்டில் உள்ள விவசாயிகளில் 86 சதவீதம் பேரிடம் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் மட்டுமே உள்ளது. சராசரியாக 2 ஏக்கர் நிலம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் தாக்கத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு மாநிலத்துக்கான வேளாண் மசோதாக்களை கொண்டு வந்தது. இந்திய மக்கள் குறைவாக அல்லது அதிகம் படித்து இருந்தாலும் புத்திசாலிகள்.

விவசாயிகள் சோர்வடைவார்கள்… போராட்டம் முடிவுக்கு வரும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது… அசோக் கெலாட்
பா.ஜ.க.

வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த இந்திரா ஜி கூட 1977ல் தேர்தலில் தோல்வி கண்டார். ஆனால் 3 ஆண்டுகளில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி வந்தார். ஒரு ஜனநாயகத்தில் மக்கள் எப்போதும் தங்களது கருத்துக்களை கொண்டுள்ளனர். காங்கிரஸ் தனது தலைவர்களை தியாகம் செய்து நாட்டை 70 ஆண்டுகளாக ஒன்றாக வைத்து இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது உயிரை இழந்தார். ஆனால் காலிஸ்தான் உருவாக விடவில்லை. மற்றொரு பிரதமர் ராஜீவ் காந்தியும் தீவிரவாதத்தால் உயிர் இழந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீந்த் சிங் அம்மாநிலத்தில் தீவிரவாதத்தை நிர்மூலமாக்கினார். அவரும் தீவிரவாதத்தால் உயிரை இழந்தார். ஆனால் பா.ஜ.க. இன்று நாட்டுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று கேள்விகளை எழுப்புகிறது?. நாட்டின் ஒற்றுமையின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.