திருச்சி- கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பனை செய்த பிஷப்-தனிப்படை போலீசார் விசாரணை

திருச்சி- கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பனை செய்த பிஷப்-தனிப்படை போலீசார் விசாரணை

திருச்சி : 03.08.20

சென்னை வேளச்சேரியை சேர்ந்த அட்வென்ட் கிறிஸ்தவ சபையின் பிஷப் பதவியில் இருக்கும் எஸ்.டி.டேவிட் என்பவர் வேளச்சேரி காந்திரோடு மகாசபை வளாகத்தில் உள்ள சபைக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்தி திருச்சியை சேர்ந்த ஒரு தரப்பிற்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் ரூ.3.75 கோடிக்கும் மேல் பெற்றுக்கொண்டு அந்த ரொக்கத்தை சபையின் வங்கிக்கணக்கில் வரவு வைக்காமல் கையாடல்

திருச்சி- கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பனை செய்த பிஷப்-தனிப்படை போலீசார் விசாரணை

செய்தும், சபைக்கு சொந்தமான இடத்தை திருச்சியை சேர்ந்த ஒரு தரப்பிற்கு பத்திரம் பதிவு செய்து கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததால் எதிர் தரப்பினர் இவர் மீது கொடுத்த புகாரின் பேரில் திருச்சி போலீஸார் பிஷப்பை நேற்று திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த புகார் குறித்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளுமாறு மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், திருச்சி துணை ஆணையரிடம் ஒப்படைக்க ஏ.சி.சின்னசாமி தலைமையிலான போலீஸார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு நில மோசடி தொடர்பாகவும், பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுதல் தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அட்வென்ட் சர்ச் பிஷப் எஸ்.டி.டேவிட்டை சென்னையில் இருந்து திருச்சிக்கு தனிப்படை போலீஸார் மூலம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி- கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பனை செய்த பிஷப்-தனிப்படை போலீசார் விசாரணை
காவல்துறை ஆணையர் லோகநாதன்

இதுகுறித்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை நேற்று பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் அவரது குடும்பத்தினர் கிரிஸ்தவ சபையில் முக்கிய பொறுப்புகளை வகித்துக்கொண்டு சொத்துக்களை கோடிக்கணக்கில் விற்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது