வெற்றி பாதையைத் தரும் வெற்றிலை தீபம்!

 

வெற்றி பாதையைத் தரும் வெற்றிலை தீபம்!

மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகும். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. கடவுளுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் நிறைவுபெறுவதில்லை. வெற்றிலையோடு, பாக்கும் சேர்வது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அம்சமாகும். எல்லா செடியும் துளிர்த்து இலையாகி, மொட்டாகி, பூத்து, காய்த்து கனியாகும். அந்த செடிக்கேற்ப இலை, காய், கனின்னு அடுத்தவங்க பசியாற பயன்படும். ஆனால், வெற்றிலை கொடியில் மட்டும் இலை மட்டுமே உருவாகும். பூவோ, காயோ,

வெற்றி பாதையைத் தரும் வெற்றிலை தீபம்!

கனியோ உண்டாகாது. இப்படி ஒரே ஒரு உருவமெடுத்தாலும் அது கடவுளையே சேரும். கடவுளை சேராவிட்டாலும் எல்லாவிதத்திலும் அடுத்தவருக்கு பயனுள்ளதா இருக்கும். அதுமாதிரி மனிதப்பிறவியான நாமும் கடவுளுக்கு நம்மை அர்ப்பணிக்கனும். அல்லது மக்களுக்கு பயனுள்ளதா இருக்கனும் என்பதே தாத்பரியம். வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியவை.
இவ்வளவு பயனுள்ள சிறப்பு வாய்ந்த வெற்றியிலையில் தீபம் எப்படி ஏற்றி வழிபட வெற்றிகள் தேடி வரும். முதலில் சேதாரம் இல்லாத, நுனிப்பகுதி உள்ள 6 வெற்றிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு உபயோகிக்க கூடாது. அதன்பின், கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள்.

வெற்றி பாதையைத் தரும் வெற்றிலை தீபம்!

6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு வைக்கவும். அதன்பின், கிழித்து வைத்த 6 வெற்றிலை காம்புகளையும்
நல்லெண்ணெய்க்குள் போட்டுவிட்டு, தீபத்தை ஏற்றவும். தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் இருந்தும் நல்ல நறுமணம்
வீசும்.

வெற்றி பாதையைத் தரும் வெற்றிலை தீபம்!

இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு, உங்கள் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதில் நினைத்துக்கொண்டு, ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து பிரார்த்தனை செய்தால் போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும், மனதிற்கும் ரொம்ப நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி, வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வித்யா ராஜா