முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் நிதானமாக ஆடும் இந்திய அணி! #IndVsAus

 

முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் நிதானமாக ஆடும் இந்திய அணி! #IndVsAus

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஜோ பர்ன்ஸ், மாத்யூ வேட் இருவரும் ஓப்பனிங்கில் இறங்க, நான்காவது ஓவர் வீச வந்த பும்ரா, ரன் ஏதும் எடுக்கத் தொடங்காத பர்ன்ஸ் விக்கெட்டைத் தூக்கினார்.

முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் நிதானமாக ஆடும் இந்திய அணி! #IndVsAus

பும்ராவோடு ஜோடி சேர்ந்த அஸ்வின் மறுபக்கம் விக்கெட் பறிக்கத் தொடங்கினார். அவர் வேட் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அவர் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் அறிமுகமாகும் சிராஜ் டெஸ்ட் போட்டியில் தனது விக்கெட்டை லபுசேன்னை வீழ்த்து பெற்றார்.

அதன்பிம் ஸ்டீவ் ஸ்வித் 0, ஹெட் 38, க்ரீன் 12, கேப்டன் டிம் 13, கம்மின்ஸ் 9, மிட்செல் ஸ்டார்க் 7, லயன் 20 என அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய பவுலர்கள் தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஆல்ரவுண்டர் ஜடேஜா 1 விக்கெட்டுகளைப் பறித்தனர். ஒரே நாளில் 72.3 ஓவர்களில் 195 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டியது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் நிதானமாக ஆடும் இந்திய அணி! #IndVsAus

அடுத்து முதல் இன்னிங்க்ஸை ஆட களம் இறங்கியது இந்திய அணி. ஓப்பனிங் வீரர்களாக மயங் அகர்வால் மற்றும் சுப்னம் கில் இறங்கினர். இதில் ஸ்ட்ரைக் எடுத்தது மயங். முதல் ஓவரை வீச வந்தவர் மிட்செல் ஸ்டார்க். முதல் ஐந்து பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்க வில்லை. ஆனால், முதல் ஓவரின் ஆறாவது பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார் மயங் அகர்வால். சென்ற போட்டியிலும் இவர் பெரியளவில் ரன் சேர்க்க வில்லை.

அடுத்து களம் இறங்கினார் பலரின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் வீரர் புஜாரா. தம் பொறுப்பு உணர்ந்து நிதானமாக ஆடி வருகிறார். அவருக்கு ஏற்ற சரியான ஜோடி என்பதுபோல சுப்னம் கில்லும் நேர்த்தியாக தம் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கில் ஓப்பனிங் வீரராக இறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட வலியுறுத்தியிருந்தார்.

கில் 28 ரன்களோடும், புஜாரா 7 ரன்களோடும் களத்தில் உள்ளனர். 11 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி 36 ரன்களோடு ஆடி வருகிறது.