மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்ற பா.ஜ.க.

மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்ற பா.ஜ.க.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மம்தா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அம்மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சருமான பார்தா சட்டர்ஜி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்ற பா.ஜ.க.
மம்தா பானர்ஜி

வேளாண் விளைபொருட்களை வாங்குவதை நிறுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் சூழ்நிலையை இந்த சட்டங்கள் உருவாக்கும், பொது விநியோக முறையின் சரிவுக்கு வழிவகுக்கும், பதுக்கல் மற்றும் கள்ள சந்தைப்படுத்துல் ஆகியவற்றை அதிகரிக்க செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ஒவ்வொரு போராட்டத்தையும் பா.ஜ.க. எப்போதும் தீவிரவாத நடவடிக்கை என்று கேவலப்படுத்துகிறது. சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானவை. அவர்கள் அதை (நாடாளுமன்றத்தில்) முரட்டுத்தனமாக பயன்படுத்தினர். விவசாயிகள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்ற பா.ஜ.க.
பா.ஜ.க.

சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்தபோது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையின் மத்திக்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிட்டப்படி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதேவேளையில், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் அந்த தீர்மானத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா மற்றும் டெல்லி ஆகியவற்றை தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய 6வது மாநிலம் மேற்கு வங்கமாகும்.