13வது முறையாக கொரோனா பணிக்காக நிதி அளித்த பிச்சைக்காரர்!

 

13வது முறையாக கொரோனா பணிக்காக நிதி அளித்த பிச்சைக்காரர்!

மதுரையை சேர்ந்த பிச்சைக்காரர் 13 வது முறையாக கொரோனா பணிக்காக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன். இவருக்கு ஒரு மகள் உள்பட மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி உயிரிழந்து விட்டார். ஒரு கட்டத்தில் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைத்து வந்த இவர் தனது தேவை போக மீதி பணத்தில் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். அப்படி இதுவரை முதியவர் பூல்பாண்டியன் சுமார் 400 பள்ளிகளுக்கு உதவியதாக தெரிகிறது.

13வது முறையாக கொரோனா பணிக்காக நிதி அளித்த பிச்சைக்காரர்!

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மதுரை வந்த அவர் தன்னார்வலர்கள் உதவியுடன் அங்கேயே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் . அன்றிலிருந்து பிச்சை எடுத்து தான் வைத்திருந்த பணத்தை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவியாக கொடுத்து வந்துள்ளார். அப்படி இதுவரை சுமார் 12 முறை ரூ.10 ஆயிரத்தை கொடுத்து வந்ததின் மூலம் ரூ.1 லட்சத்துக்கு 20 ஆயிரம் பணத்தை முதியவர் அளித்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி சுதந்திர தினத்தில் முதியவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

13வது முறையாக கொரோனா பணிக்காக நிதி அளித்த பிச்சைக்காரர்!

இந்நிலையில் 13 வது முறையாக 10ஆயிரம் ரூபாயை வசூல் செய்து அதனை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைகாரர் பூல்பாண்டியன் அளித்துள்ளார். இதனால் அவரின் நிதியுதவி தொகையானது 1.30 லட்சமாக அதிகரித்துள்ளது. பிச்சை எடுத்து மற்றவர்களுக்கு உதவி செய்து முதியவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.