சேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகுதான் அதன் அருமை தெரியும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

 

சேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகுதான் அதன் அருமை தெரியும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகே அதன் அருமை மக்களுக்குத் தெரியவரும் என்று செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நிருபர்கள் சினிமா டிக்கெட் விலை குறைப்பு, 8 வழிச் சாலை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சினிமா டிக்கெட் ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம். சினிமா டிக்கெட் ஜி.எஸ்.டி-யை பொருத்தவரை ஒரே மாதிரியா 28 சதவிகிதம் என்று இருந்ததை ரூ.100 வரை இருந்தால் 18 சதவிகிதம் அதற்கு மேல் 28 சதவிகிதம் என்று மாற்றி வாங்கிக்கொடுத்தது எங்கள் அரசுதான். கேளிக்கை வரி என்பது 30 சதவிகிதம் இருந்தது. அது அதிகமாக இருக்கிறது என்று கூறியதால் 10 சதவிகிதமாக குறைத்தோம். மீண்டும் கோரிக்கை விடுத்ததால் எட்டு சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

சேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகுதான் அதன் அருமை தெரியும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டிநான்கு வழி சாலை வந்த பிறகு கூட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது சேலத்துக்கு செல்ல உளுந்தூர்பேட்டை வரை நான்கு வழி சாலையில் 2 மணி நேரத்தில் சென்றுவிட முடிகிறது. அங்கிருந்து ஆத்தூர் வழியாக சேலம் செல்ல நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. ஈரோடு, கோவை போன்ற பகுதிகளுக்கு செல்ல அந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசு நான்கு வழிச் சாலையை ஆறு வழிச்சாலையாக அமைத்து வருகிறது. வட மாநிலங்களில் எக்ஸ்பிரஸ் வே என்று சாலை கட்டமைப்பு வசதிகள் நம்மை விட உயர்ந்த வகையில் உள்ளன. வளர்ச்சிப்பாதையில் செல்லும் தமிழகத்தில் இப்படிப்பட்ட சாலை வசதிகள் வந்தால்தான் விரைவான போக்குவரத்து வசதி காரணமாக மக்களும் சரி, வணிகமும் சரி பயன்பெற முடியும். அந்த சாலை வந்த பிறகுதான் அதன் அருமை தெரியும்” என்றார்