ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை அப்பகுதியில் பெரும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆலையை மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 பிப்ரவரி 27 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.
அதே சமயம் ஆலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞா் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

இந்த வழக்கானது நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி வாதம் முடிந்து இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது . அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு வழங்கியது. மேலும் தமிழக அரசு ஆலைக்கு சீல் வைப்பதாக எடுத்த முடிவு செல்லும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இன்று காலை தீர்ப்பு வர இருந்த நிலையில் 1100 காலவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர். கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் கொண்டாட்டங்களை வீடுகளில் வைத்து கொள்ளுமாறு தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.