கதை சொல்லும் ஜெர்ஸியில் களம் இறங்குகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

 

கதை சொல்லும் ஜெர்ஸியில் களம் இறங்குகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

இன்றுதான் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குப் பறந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா மோதும் தொடர் விரைவில் தொடங்க விருக்கிறது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும்.

நவம்பர் 27 – லிருந்து ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும்.

கதை சொல்லும் ஜெர்ஸியில் களம் இறங்குகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6 மற்றும் 8 -ம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்க விருக்கின்றன.

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் தேதியும், இரண்டாம் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதியும், மூன்றாம் டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ம் தேதியும், நான்காம் டெஸ்ட் போட்டி ஜனவரி 15-ம் தேதியும் தொடங்குகிறது.

கதை சொல்லும் ஜெர்ஸியில் களம் இறங்குகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

இந்தத் தொடரில் அணிந்துகொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெ அணிக்கு பிரத்யேக ஜெர்சியுடன் களம் இறங்க உள்ளது. அதில் என்ன ஸ்பெஷல் என்றால், ஆஸ்திரேலியாவின் சிறப்புகளைச் சொல்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

1868 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா – இங்லாந்து கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதுதான் ஆஸ்திரேலியா வெளிநாட்டில் அதுவும் கடல் கடந்த முதல் கிரிக்கெட் தொடர் அதைக் குறிப்பதாகவும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் வளம், ஒற்றுமை உள்ளிட்ட சிறப்புகளை விளக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.