அசாமில் மதரஸாக்களை பொது பள்ளிகளாக மாற்றும் மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க அரசு.. ஏப்ரல் 1 முதல் அமல்

 

அசாமில் மதரஸாக்களை பொது பள்ளிகளாக மாற்றும் மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க அரசு.. ஏப்ரல் 1 முதல் அமல்

அசாம் சட்டப்பேரவையில் மதரஸாக்களை பொது பள்ளிகளாக மாற்றும் மசோதாவை அம்மாநில பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு நிதியுதவியில் இயங்கி அனைத்து மதரஸாக்களும் பொது பள்ளிகளாக நடைமுறைக்கு வரும்.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் 3 நாள் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியது. அன்று அம்மாநில கல்வித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் திரும்ப பெறும் மசோதாவை (2000) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மதோசா தொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், தற்போது நடப்பில் உள்ள அசாம் மதரஸா கல்வி சட்டம் 1995, அசாம் மதரஸா கல்வி சட்டம் 2018 ஆகிய இரண்டு சட்டங்களையும் ரத்து செய்ய முன்மொழியும்.

அசாமில் மதரஸாக்களை பொது பள்ளிகளாக மாற்றும் மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க அரசு.. ஏப்ரல் 1 முதல் அமல்
பா.ஜ.க.

இதன்மூலம் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் பொதுக் கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும். எதிர்காலத்தில் மாநில அரசு எந்த மதரஸாவையும் நிறுவாது (தொடங்காது) என்று தெரிவித்தார். இந்த மசோதாவை காங்கிரசும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்த்தன. இந்நிலையில் நேற்று அசாம் சட்டப்பேரவையில் இந்த குரல் வாக்கெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்டத்தை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற காங்கிரஸ் மற்றும் இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் கோரிக்கையை கல்வித்துறை அமைச்சர் நிராகரித்து விட்டார். இதனால் அந்த 2 கட்சிகளும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

அசாமில் மதரஸாக்களை பொது பள்ளிகளாக மாற்றும் மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க அரசு.. ஏப்ரல் 1 முதல் அமல்
ஹிமந்தா பிஸ்வா சர்மா

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகள் குறித்து கல்வித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், இது சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு பரிசாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த மதரஸாக்களில் படிக்கும் மாணவர்கள் இந்த முடிவை பத்து ஆண்டுகளுக்கு பிறகு பாராட்டுவார்கள் என்று தெரிவித்தார். இந்த மசோதாவின்படி, 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு நிதி உதவியில் இயங்கும் அனைதது மதரஸாக்களும் மேல்நிலை தொடக்க, உயர் மற்றும் உயர்நிலை பள்ளிகளாக நடைமுறைக்கு வரும். அந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நிலை, ஊதியம், கொடுப்பனவுள் மற்றும் சேவை நிலைமைகளில் எந்த மாற்றமும் இருக்காது என தகவல்.